/indian-express-tamil/media/media_files/2024/12/07/R2raOUvryOeOcLbe2vvd.jpg)
தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கடிகார தயாரிப்பு நிறுவனமான எஃப்.பி.ஜோர்னின் நிறுவனர் பிரான்சுவா-பால் ஜர்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொணடவர் தனுஷ். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த அவரின் 50-வது திரைப்படமான ராயன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் தெலுங்கில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் இந்த படத்தின் பூஜையும் போடப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் தனுஷ் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் தனுஷ் தற்போது, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கடிகார தயாரிப்பு நிறுவனமான எஃப்.பி.ஜோர்னின் நிறுவனர் பிரான்சுவா-பால் ஜர்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா காலத்திலும் மிகச்சிறந்த கடிகார தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு எஃப்.பி.யை சந்தித்தது ஒரு பெரிய மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.
1999 இல் நிறுவப்பட்டது, எஃப்.பி.ஜோர்ன் ஒரு ஆடம்பர கடிகார தயாரிப்பாளர் மற்றும் ஃபாண்டேஷன் டு கிராண்ட் பிரிக்ஸ் டி'ஹார்லோகெரி டி ஜெனீவ் வழங்கும் ஐகுயில் டி'ஓர் கிராண்ட் பரிசை மூன்று முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம தற்போது இணையத்திலர் வைலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.