scorecardresearch

துவண்டு கிடந்த மனதை தூக்கி நிறுத்திய சிறுமி… நடிகர் தனுஷ் பகிர்ந்த முக்கிய தருணம்

தனுஷ் கதை மற்றும் நடிப்பில் வெளியான நானே வருவேன் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாத்தி, மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

துவண்டு கிடந்த மனதை தூக்கி நிறுத்திய சிறுமி… நடிகர் தனுஷ் பகிர்ந்த முக்கிய தருணம்

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். இயக்குனர் தயாரிப்பாளர் பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கஸ்தூரி ராஜாவின் இளையமகனான வெங்கடேஷ் பிரபு சினிமாவுக்காக தனது பெயரை தனுஷ் என்று மாற்றிக்கொண்டு கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவாதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் தான் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில், அடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன் படத்தில் நடிக்க, இந்த படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமைந்து தனுஷின சினிமா வாழக்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது.

அடுத்து இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான திருடா திருடி படம் அவரை நம்மில் ஒருவர், பக்கத்துவீட்டு பையன் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு வெளியான ஓரிரு படங்கள் தோல்வியடைந்தாலும். தேவதையை கண்டேன், அது ஒரு கனாக்காலம், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் தனுஷ்க்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.

தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படம் தனுஷை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதன்பிறகு ஆடுகளம், மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி, வட சென்னை, அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பா.பாண்டி என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் 3 படத்தில் எழுதி பாடிய கொலைவெறி பாடல் பல சாதனைகளை படைத்தது. மேலும் இந்தி 3 படங்களும் ஹாலிவுட்டில் 2 படங்கள் என தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது கதை மற்றும் நடிப்பில் வெளியான நானே வருவேன் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாத்தி, மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இருந்தாலும், தனுஷ் தனது தொடக்க காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். காதல்கொண்டேன் படம் தொடங்கியபோது இவரெல்லாம் ஹீரோவா என்று பலர் ஏளனம் செய்துள்ளனர். ஆனால் இதை கண்டுகொள்ளாத தனுஷ் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் இந்திய ப்ரூஸ் லீ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிவி பேட்டியில் பேசிய தனுஷ் தனது முதல் ரசிகை குறித்து பேசியுள்ளார். காதல் கொண்டேன் பட ஷீட்டிங்கின்போது, எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஓரமாக உட்கார்ந்திருக்கிறேன். அப்போது அங்கு வந்த ஒருவர் யார் படத்தின் ஹீரோ என்று கேட்க, அவர்தான் என்று என்னை காட்டினார்கள். ஆனால் அவர் இவரெல்லாம் ஹீரோவா என்று கலாய்த்து சிரித்துவிட்டார்.

எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு ஏன்டா இங்க வந்தோம் என்று நினைத்தேன். ஆனால் அந்த கூட்டத்திற்கு நடுவில் இருந்து ஒரு சிறுமி வந்து ஆட்டோகிராப் ப்ளீஸ் என்று சொன்னது. எனக்கு ஒரே ஆச்சரியம் இந்த பொண்ணு ஏன் நம்மகிட்ட ஆட்டோகிராப் கேக்குது என்று நினைத்தேன். அப்போ உங்க துள்ளுவதோ இளமை படத்தை பார்த்தேன் எனக்கு ரொம்ப புடிக்கும் என்று அந்த பொண்ணு சொன்னது. இதை கேட்டவுடன் கூட்டம் அமைதியானது.

அந்த பெண்ணுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தேன். அவர்தான் என் வாழ்க்கையின் முதல் ரசிகை என்று கூறியுள்ளார். ஏன்டா இங்கு வந்தோம் என்று ஃபீல் பண்ணிய தனுஷ்க்கு அந்த பெண் கேட்ட ஆட்டோகிராப் தற்போது அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாற்றியுள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor dhanush share his old story about his first fan in tamil cinema

Best of Express