பின்னணி இசை முடிந்தது : புயல் வருகிறது ; ராயன் அப்டேட் கொடுத்த தனுஷ்

பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன்.

பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன்.

author-image
WebDesk
New Update
dhanush rayan

ராயன் படத்தில் தனுஷ்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தனுஷின் ராயன் படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனரின் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். சன்பிடிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷுன் 50-வது படமாகும்.

தனுஷ் எஸ்.ஜே.சூர்யாபிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளிதுஷாரா விஜயன்வரலக்ஷ்மி சரத்குமார்காளிதாஸ் ஜெயராம் மற்றும் சுந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷின்'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வட சென்னையில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையான இப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.இதனிடையே படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் இருப்பதால் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப்போகலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment
Advertisements

தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனுஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணி இசை சேர்ப்பு பணிகளில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள தனுஷ், ராயன் பின்னணி இசை முடிந்தது. ஒரு புயல் வருகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியாவது உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: