/tamil-ie/media/media_files/uploads/2018/11/actor-dhanush-announcement.jpg)
actor dhanush announcement, நடிகர் தனுஷ்
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காலா பட இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷ்
இந்தப் படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், வெகுவாக பாராட்டி உள்ளார். “பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டேன். அமர்க்களமாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட யதார்த்தமும் வாழ்க்கைமுறையும் நாம் அங்கே இருப்பது போல் உள்ளது.
November 2018Finally watched pariyerum perumal. Mind blown.The rawness nd life style shown is so real it feels u r there. congrats 2 d entire team.Also wud like 2 announce dir Mari selvaraj will b doing his next film with me under @theVcreations so excited to work with a talent like him.
— Dhanush (@dhanushkraja)
Finally watched pariyerum perumal. Mind blown.The rawness nd life style shown is so real it feels u r there. congrats 2 d entire team.Also wud like 2 announce dir Mari selvaraj will b doing his next film with me under @theVcreations so excited to work with a talent like him.
— Dhanush (@dhanushkraja) November 13, 2018
மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து நான் நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அவர் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.