நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட சென்றுள்ளார். அதன் புகைப்படம் ஒன்றை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
Advertisment
சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூலித்தது. அதேபோல் தனுஷின் தயாரிப்பு - நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படமும் அவரின் ரசிகர்களை கவர்ந்து, வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த் - தனுஷ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புகைப்படம்
2.0 படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்து வந்த பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில் உள்ளது. எனவே மாமனாரும் மருமகனும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என அமெரிக்கா சென்றிருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
வருடத்திற்கு ஒரு முறையாவது அமெரிக்காவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்வது ரஜினியின் வழக்கம். கடந்த வருடம் கூட அமெரிக்காவில் அவர் ஒய்யாரமாக வாக்கிங் செல்லும் வீடியோ பெரும் அளவில் வைரலானது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட, அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் இவர் குடும்பத்துடன் பங்கேற்றார்.
அப்போது தனுஷும் - ரஜினியும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார். நேற்று வெளியான இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.