Advertisment

வர்மா படத்தின் சம்பாதித்த முழு சம்பளத்தையும் த்ரூவ் விக்ரம் என்ன செய்தார் பாருங்கள்!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhruv Vikram

Dhruv Vikram

Actor Dhruv Vikram Donated 'Varma' Film Salary to Kerala Relief Fund: பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் நடிகர் த்ரூவ் விக்ரம் நடித்துள்ள முதல் படம் வர்மா. இப்படத்தில் அவர் சம்பாதித்த முழு சம்பளத்தையும் கேரளா வெள்ள பாதிப்பு மீட்புக்காக அளித்துள்ளார்.

Advertisment

தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தென் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை இயக்குநர் பாலா தற்போது தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் விஜய் தேவரகொண்டா கதாப்பாத்திரத்தில், கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கிறார்.

Actor Dhruv Vikram Donated 'Varma' Film Salary to Kerala Relief Fund: கேரளாவிற்காக முதல் சம்பளத்தை கொடுத்த நடிகர் த்ரூவ் விக்ரம் :

வர்மா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விக்ரம் மகன் த்ரூவ் விக்ரம் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை மேகா நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து காலா புகழ் ஈஸ்வரி ராவ் மற்றும் ரைசா வில்சன் நடித்துள்ளனர்.

வர்மா டிரெய்லர் உள்ளே : பாலா ரசிகர்களுக்கு ஓகே... அர்ஜுன் ரெட்டி ரசிகர்களுக்கு?

 இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு மற்றும் விமர்சனத்தை பெற்றிருந்தாலும், பாலா ரசிகர்கள் இதனை ரசிக்கின்றனர் என்பதே உண்மை.
September 2018

தற்போது, இந்த படத்தில் நடித்ததற்காக வாங்கிய தனது சம்பளம் முழுவதையும் த்ரூவ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிதியுதவியாக அளித்துள்ளார்.

Kerala Tamil Cinema Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment