scorecardresearch

நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு 4வது முறையாக தள்ளுபடி

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதான, நடிகர் திலீப் நான்காவது முறையாக கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

dileep - kaviya mathavan

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது. நான்காவது முறையாக மனு தள்ளுப்படியானது திலிப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டார். இது கேரளா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திலீப் நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்திருந்தார். ஆனால் நடிகை காவ்யா மாதவனுடன் நெருக்கமாக பழகி வந்தார். இதை பாவனா, மஞ்சுவாரியாரிடம் சொல்லிவிட்டார். இதையடுத்து திலீப் – மஞ்சுவாரியார் மன வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் விவாகரத்துப் பெற்றனர். காவ்யா மாதவனை திலிப் திருமணம் செய்து கொண்டார்.

பாவனாவை பழிவாங்க, சுனில் பல்சர் என்பவரை வைத்து கடத்தியதாக நடிகர் நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப், ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். திலீப்பை ஜாமீனில் விட அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்நிலையில், 2 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில் அவரது தந்தை நினைவு நாளின் போது பரோலில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து 4-வது முறையாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திலீபின் மனைவி காவ்யா மாதவனும் முன் ஜாமீன் கேட்டு கேரளா ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor dileep bail petition rejected by kerala high court