பாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும்: நடிகர் திலீப் உயர்நீதிமன்றத்தில் மனு!

நடிகர் திலீப்பிற்கும், பாவனா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதிற்கும் தொடர்பு இருப்பது உறுதியானது

காரில் பாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று நடிகர் திலீப உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், படப்பிடிப்பு முடித்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனா மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை அந்த கும்பல் செல்ஃபோனில் வீடியோவும் எடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகர் திலீப்பிற்கும், பாவனா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதிற்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, திலீப் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்பு, நடிகர் திலீப் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில், கேரள நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

நடிகை பாவனாவும் , சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் கணவனை மணந்தார். இந்நிலையில், பாவனா வழக்கில் ஏற்கனே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியில் போலீசார் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும், உண்மையான வீடியோ காட்சிகளை தனகு வழங்குமாறும் கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் திலீப் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு பெண்ணின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை வீடியோவாக வெளியில் காட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதனால், பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், மீண்டும் நடிகர் திலீப் பாவான மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை தனக்கு வழங்கும்படி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கக்கிழமை நடைபெறுகிறது.

×Close
×Close