Tamil - Malayalam actor Pratap Pothen passes away Tamil News: நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானார்.
பிரதாப் போத்தன் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுவர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றார். மோகன்லால் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு யாத்திரமொழி திரைப்படம் தான் அவர் கடைசி இயக்கிய படமாகும். .
நடிப்பில் அவர் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மம்முட்டி நடித்த சிபிஐ 5 தி பிரைன் படத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் மோகன்லாலின் அடுத்த இயக்கத்தில் பரோஸ்: நிதி காக்கும் பூதம் படப்பிடிப்பில் இருந்தார்.
பிரதாப் போத்தன் 1985 இல் நடிகை ராதிகா சரத்குமாரை மணந்தார், ஆனால் 1986 இல் இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் அவர் அமலா சத்யநாத்தை மணந்தார். ஆனால், 2012 ஆண்டில் அவருக்கும் விவாகரத்து கொடுத்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இல்லத்தில் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடலுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி." என்று பதிவிட்டிருந்தார்.
தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி. pic.twitter.com/KL0Whqt93X
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.