scorecardresearch

வாழ்வின் மிகவும் மாயாஜாலமான தருணம்… கவுதம் – மஞ்சிமா திருமண போட்டோஸ் வைரல்

கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாக தகவல் வெளியானது.

வாழ்வின் மிகவும் மாயாஜாலமான தருணம்… கவுதம் – மஞ்சிமா திருமண போட்டோஸ் வைரல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் கவுதம் கார்த்திக் தொடர்ந்து, வை ராஜா வை, இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன் தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மலையாளத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமாகி, அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் அக்டோபர் 31 லேடிஸ் நைட் என்ற படம் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் 28-ந் தேதி கவுதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்கள் அன்று வெளியாகி இருந்த நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், திரை நட்சத்திரங்கள் ரசிகர்கள் என பலரும் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor gautham karthik and manjima mohan wedding photos viral