நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்ஃபோன் பறிப்பு : போலீஸ் விசாரணை

Actor Gautham Karthik latest News : மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்

தமிழ் திரைப்பட நடிகர்  கௌதம் கார்த்திக்கின் செல்பேசியை அடையாளம் தெரியாத நபர்கள் களவாடி சென்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கௌதம் கார்த்திக்கை  , இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்றனர்.

கௌதம் கார்த்திக் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.

மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்

இதனையடுத்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்திரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின்  அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க  காவலர்துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor gautham karthik mobile snatching news gautham karthik latest news

Next Story
பல ஆண்டுகள் கழித்து கர்ப்பமான தனம்!Tamil Serial News, Vijay TV Pandian Stores
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express