நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்: த.வெ.க தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று சாந்திக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று சாந்திக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

author-image
WebDesk
New Update
gm vi

கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை (06-05-2025) காலமானார். அவருக்கு வயது 70.

Advertisment

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவருடைய மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் சாந்தியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் சத்தியராஜ், செந்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று சாந்திக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

சாந்திக்கு கவுண்டமணிக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

goundamani Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: