வறுமையில் வாடிய அ.தி.மு.க நடிகர்... கைவிட்ட கரை வேட்டிகள்... ஓடி வந்து உதவிய விஜய் டி.வி!

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் குண்டு கல்யாணம்; இளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வேண்டுகோள்

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் குண்டு கல்யாணம்; இளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
வறுமையில் வாடிய அ.தி.மு.க நடிகர்... கைவிட்ட கரை வேட்டிகள்... ஓடி வந்து உதவிய விஜய் டி.வி!

Actor Gundu kalyanam enters Vijay TV NINI serial: நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம், விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிப்பதாக, அந்த சீரியலின் நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

வித்தியாசமான உடல் அமைப்பு இருந்தாலும் நடிக்க முடியும் என சாதித்து காட்டியவர்களில் முக்கியமானவர் நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம். சினிமாவில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குண்டு கல்யாணம், நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்து, கடும் போராட்டத்திற்கு பிறகு 1979ஆம் ஆண்டு மழலை பட்டாளம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவருடைய வித்தியாசமான நடிப்பு மற்றும் உடல் தோற்றம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தில்லுமுல்லு, போக்கிரி ராஜா, தங்கமகன், படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளார் குண்டு கல்யாணம்.

தீவிர அதிமுக தொண்டரான குண்டு கல்யாணம், தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் தேர்தல்களில் அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வந்தார். சினிமாவில் நடிப்பதை விட்ட பிறகு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

Advertisment
Advertisements

இந்தநிலையில், சமீபத்தில் இவர் தீவிர சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இவர் தன்னுடன் நடித்த பிற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரிடம் உதவி கேட்டு இருந்தார். ஆனால், உதவி கிடைக்காததால் தன்னுடைய ஆபரேஷனை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது, தன் வாழ்க்கையில் நடந்த மிக சோகமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், நான் சினிமாவில் பேர், புகழ் கிடைத்தது. ஆனால், பெரிதாக பணம் சம்பாதிக்க முடியவில்லை. சினிமா, நாடகம் என்று இரண்டில் மட்டும் தான் என்னுடைய கவனம் இருந்தது.

ஒருமுறை என்னோட பொண்ணு கல்யாணத்துக்காக வைத்திருந்த நகைகளை திருடிட்டு போய்ட்டாங்க. அப்ப நான் சட்டமன்றத்தில் ஒரு பதவியில் இருந்ததால்,  இது குறித்து சட்டமன்றத்தில் நான் பல பேரிடம் கேட்டேன். இது வரை எனக்கு அதற்கான ஒரு தீர்வை கொடுக்க வில்லை. நான் சட்ட மன்ற பதவி வகித்து என்ன பிரயோஜனம்.

நான் சினிமா துறையில் இருந்து விலகியதை நினைத்து இப்ப ரொம்ப ஃபீல் பண்றேன். தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது யாருமே எனக்கு உதவ வில்லை. ஓபிஎஸ் ஐயா மட்டும் தான் எனக்கு உதவி செய்தார். நான் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டப்போது என் மகள் ரொம்ப கஷ்டப்பட்டார். என் மகள் என் கட்சியிடம் உதவி கேட்டபோது இங்கே போ, அங்கே போ என்று அழைய வைத்தார்கள்.

ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களிடம் நீங்கள், எனக்கு பண உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னை மாதிரி நலிந்த நடிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது. இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று இந்த சமயத்தில் நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். உடம்பு சரி பண்ணிட்டு வந்து எல்லோரிடம் வாய்ப்பை கேட்டு கண்டிப்பாக சினிமாவில் நுழைவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் குண்டு கல்யாணத்திற்கு கொடுத்துள்ளது.

இதுகுறித்து சீரியலின் கதாநாய கனான செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் குண்டு கல்யாணம் அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "'நாம் இருவர் நமக் கு இருவர்' சீரியலில் ஒரு சிறிய காட்சிக்காக நடிகர் குண்டு கல்யாணம் சாருடன் இணைந்து பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மாறன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வேடிக்கையான எபிசோட்களை இந்த வார சீரியலில் மாலை 6.30 மணிக்கு @vijaytelevision-இல் பாருங்கள்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து நடிகர் குண்டு கல்யாணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Naam Iruvar Namakku Iruvar Tamil Cinema Vijay Tv Tamil Nadu Admk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: