Advertisment

சன்.டி.வி.யின் புதிய சீரியல் ஆனந்தராகம்... சின்னத்திரையில் என்ட்ரி ஆகும் நடிகர் இளவரசு

தமிழில் சீரியல்களுக்கு பிரபலமான சன்.டி.வி.யில் காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சன்.டி.வி.யின் புதிய சீரியல் ஆனந்தராகம்... சின்னத்திரையில் என்ட்ரி ஆகும் நடிகர் இளவரசு

முன்னணி சேனலான சன்.டி.வி.யில் ஆனந்த ராகம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீரியல் தொடர்பான ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழில் சீரியல்களுக்கு பிரபலமாக சன்.டி.வி.யில் காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சீரியல் மீதான மோகமுமம் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதிய சீரியல்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் தற்போது சன்.டி.வி.யில் ஆனந்த ராகம் என்ற புதிய சீரியல் வரும் ஆகஸ்ட் 29-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரும், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான இளவரசு இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார்.   

மேலும் அனுஷா பிரதாப் ஈஸ்வரியாக முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். நாயகி ஈஸ்வரியின் தந்தையாக நடிகர் இளவரசு நடிக்கிறார். மேலும் வினோதினி வைத்தியநாதன் சீரியலில் நயகியின் அம்மா வேடத்தில் நடிக்கிறார். சன் டிவி பழைய சீரியல் அப்பா மற்றும் சித்தி 2 சீரியலில் நடித்தார்.

மேலும் தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய வினோதினி வைத்தியநாதன், அதனைத் தொடர்ந்து பல முக்கிய கேரக்டர்களை ஏற்று நடித்தார். மேலும் சமீபத்தில் சோனி லிவ்வில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment