Actor Jai Akash to enter Tamil Show Abhi Tailor : ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் நடிப்பில் வெளியாகி வரும் தமிழ் சீரியஸ் அபி டெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரீல் ஜோடி ரியல் ஜோடியாகி நிஜ வாழ்க்கையில் திருப்பங்களை கொண்டிருப்பது போல் அவர்களின் சீரியலும் பல்வேறு திருப்பங்களை சந்திக்கக் காத்திருக்கிறது.
Advertisment
100வது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய கையோடு பல சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு தர துவங்கியுள்ளது. அசோக்கை டோனியும் மைக்கேலும் சேர்ந்து கடத்த அசோக்கை காப்பாற்றச் சென்ற அபியும் வில்லன்களிடம் மாட்டிக் கொள்கிறார். வில்லன்களிடம் சிக்கிக் கொண்ட அபி மற்றும் அசோக்கை காப்பாற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் தமிழ் சீரியலுக்குள் அடி எடுத்து வைக்கிறார் பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ்.
இது தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஜெய் ஆகாஷ் ”நான் புதிய ப்ரோஜெக்ட் ஒன்றில் போலீஸ் ஆபிசராக நடிக்க உள்ளேன். இது குறித்த விபரங்களை உங்களுக்கு விரைவில் தெரிவிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
வெகு காலமாக அசோக்கின் பெற்றோர்கள் நடத்தி வரும் துணிக்கடை பிஸினஸை மூட வேண்டும் என்றும் டோனியும் அவருடைய மகன் மைக்கேலும் அசோக்கின் அம்மா மற்றும் அப்பாவை மிரட்டி வருகின்றனர். அசோக்கின் அப்பா இதனை கேட்காவிட்டாலும் அசோக்கின் அம்மா நீலாம்பரி தன்னுடைய மகனின் உயிரை காக்க தொழிலை விட்டுவிடலாம் என்று கூறுகிறார். ஜெய் ஆகாஷின் வருகை இந்த கதையில் எத்தகைய திருப்பதை அளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil