விஜய் டிவியில் ப்ரைம் டைமலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், இல்லத்தரசியின் கதை என்பதால் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ட்விஸ்டுகள் நிறைந்திருக்கும் இந்த சீரியலின் ஹீரோயின் பாக்யா, குடும்ப சுமையைக் குறைப்பதற்காகச் சமையல் செய்து அதனை டெலிவரி செய்து வருகிறார். அப்போது, அவருக்கு தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ஆயிரம் பேருக்கு சமைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்டர் கிடைக்கிறது. இந்தத் தொழிலதிபர் என்ட்ரீயால் குறைந்துள்ள பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி ரெட்டிங், மீண்டும் அதிகரிக்கும் என சீரியல் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
ஏனென்றால், அந்த தொழிலதிபர் ரோலில் வலம்வருபவர் வேறு யாரும் இல்லை, 'தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்' என்று பெயர்பெற்ற ஜெய்ஷங்கரின் மகன் சஞ்சய் சங்கர் தான். அவருடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் எடுத்திருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Advertisment
Advertisements
அவருடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா செல்லமுத்துகூறுகையில், "உண்மையில் நான் அதிர்ஷ்டசாலி. ஏன்னு கேட்கிறிங்லா ? நம்ம மக்கள் கலைஞன் 007 ஜேம்ஸ்பாண்டு ஜெய்சங்கர் சார் கூட சேர்ந்து நடிக்க முடியாமல் போனாலும், அவரோட மகன் சஞ்சய் சங்கர் கூட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கே .....அப்போ நான் அதிர்ஷ்டசாலிதானே” என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மௌன ராகம் சீரியலில் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை விஜய் டிவி களமிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.