ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் படத்துக்கு தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் கெட்ட வார்த்தை இருக்கிறது, அதனால், இறைவன் படத்துக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இறைவன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இறைவன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் தனி ஒருவன் படத்துக்குப் பிறகு, இறைவன் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.
அண்மையில், இறைவன் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இறைவன் படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள், இந்த படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இறைவன் படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சைக்கோ த்ரில்லர் கதை என்று கூறப்படும் இறைவன் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இறைவன் படத்துக்கு தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் (வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படம்) அளிக்கப்பட்டுள்ளது.
இறைவன் படம் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் நேரம் ஓடக்கூடியது என்றும் இந்த படத்தில் இரண்டு இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியதாக தெரியவந்துள்ளது. ஆனால், படத்தில் அந்த கட்சிகளை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரசியம் இருக்காது என்பதால், படக்குழு அதை நீக்க முன்வராததால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி படம் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸ் படங்கள்தான் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு உள்ள நிலையில், ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது: என் படங்கள் எப்போதும் ஃபேமிலி ஆடியன்ஸ்களை கவரும் வகையில் தான் இருக்கும், ஆனால் இறைவன் படத்தை மட்டும் குழந்தைகளோடு சேர்ந்து வந்து பார்க்க வேண்டாம் எனவும், இதன் பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே குழந்தைகள் பார்க்கும் வகையில் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இறைவன் படத்தின் கதை சந்தோஷத்திற்காக கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிப்பது. இதில் அந்தக் கில்லர் கொலை செய்யும் விதமும் அந்த பிணங்களை காட்சிப்படுத்தும் விதமும் கொடூரமாக வருகிறது என்பதால், தான் தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.
அதில் இருக்கும் ஒரு சில கெட்ட வார்த்தைகளை நீக்க சொல்லி இருக்கிறார்கள். அதை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இருக்காது என்பது நன்றாக தெரிகிறது. அதனால்தான் ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை, படத்தின் கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“