நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் 15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்தவர். கடந்த சில மாதங்களாக நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிந்துவிட்டதாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் தகவல் வெளியாகி பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவியை விட்டுப் பிரிவதாக திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பின்னணியில், நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி யார், சோசியல் மீடியா செலிபிரிட்டி, சமூக சேவகர் என பன்முகம் கொண்ட அவரைப் பற்றிய தகவல்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்த அவரது மனைவி ஆர்த்தி யார், அவரது பின்னணி என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 40ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அயன் மற்றும் ஆரவ் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த சூழலில், ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
பிரபல டிவி பிரொடியூசர் சுஜாதா மற்றும் தொழிலதிபர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் ஆர்த்தி. சுஜாதா பல டிவி சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரிச் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆர்த்தில், ஸ்காட்லாந்தில் எம்.ஐ.எம் (இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட்) முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஆர்த்தி ஸ்காட்லாந்து நாட்டில் வைத்துத் தான் முதல்முறையாக ஜெயம் ரவியை சந்தித்துள்ளார். இருவருக்கும் விரைவிலேயே காதலிக்கத் தொடங்கினர். இரு வீட்டார் சம்மதத்துடன், 2009-ல் திருமணம் நடந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பலோயர்கள் உள்ளனர். சிறு தொழில் ஒன்றை கவனித்து வரும் ஆர்த்தியின் பேஷன் ஆடைகளுக்கும் சோஷியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கொரோனா காலத்தில், தொழில்முனைவோர்களாக உள்ள பெண்கள் தங்கள் தொழில் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, ஆர்த்தியிடம் பகிர்ந்துகொண்டனர். இதன் தாக்கத்தால், ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் சிறு தொழில்கள், குறிப்பாகப் பெண்கள் நடத்தும் சின்ன சின்ன தொழில்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் புரோமோட் செய்தார். அவரது இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினர்.
அது மட்டுமல்ல, ஆர்த்தி Rise4Girl என்ற அமைப்பின் விளம்பர தூதராகவும் ஆர்த்தி உள்ளார். இந்த அமைப்பு ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் கல்வி கற்க உதவி செய்து வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, “என்னைப் புரிந்துகொண்டவரே வாழ்க்கைத் துணையாக வரப்போகிறார் என்று கூறியிருந்தார். ஆனால், அவருடைய 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.