நடிகர் ஜெயம்ரவி – ஆர்த்தி தம்பதி விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவருடனான போட்டோஸ்களை நீக்கியது விவாகரத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக ஜெயம்ரவி, கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றியை கொடுக்க போராடி வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது படங்கள் தோல்வியை சந்தித்தது. இதில் பொன்னியின் செல்வன் படம் வெற்றிதான் என்றாலும் கூட அது மல்டிஸ்டார் படங்கள் கணக்கில் வந்துவிட்டது. இதனால் ஜெயம்ரவி தனி வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்க : Ponniyin Selvan actor Jayam Ravi’s wife Aarti deletes all Instagram posts with husband, sparks divorce rumours
கடைசியாக அவரது நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு வெளியான, அகிலன், பூமி, சைரன், இறைவன், உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது, ஜீன், காதலிக்க நேரமில்லை, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்வதாக சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்த வதந்திகள் குறித்து ஜெயம்ரவி ஆர்த்தி ஆகிய இருவருமே எந்த பதிலும் வெளியிடாத நிலையில், சமீபத்தில் தான், ஜெயம்ரவியின் முதல் படமான ஜெயம் படத்தின் பதிவுகளை ஆர்த்தி வெளியிட்டிருந்தார். இதன் மூலம் அவர்களுக்கிடையே பிரச்சனை இல்லை நன்றாக இருக்கிறது என்ற கருத்துக்கள் வெளியாக தொடங்கியது. இருப்பினும், அவரது சமீபத்திய நடவடிக்கை மீண்டும் அவர்களின் திருமணம் முறிவு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இன்ஸ்டாலின் ப்ரோஃபைலில், “நான் செல்வாக்கு செலுத்தவில்லை. ஊக்கமளிப்பதாக நம்புகிறேன். ஜெயம்ரவியுடன் திருமணம் என்று இருக்கும் நிலையில், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலில் அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவியின் அனைத்து புகைப்படங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதேபோல் இருவரும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்து வருகின்றனர். ஆனாலும் ஆர்த்தி ஜெயம்ரவி தொடர்பான அனைத்து பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பல வருடங்கள் காதலித்து 2009 இல் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம்ரவி, அடுத்து பேராண்மை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தீபாவளி, தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் அவரது சினிமா வாழ்க்கை உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“