scorecardresearch

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஸ்டன்னிங் போட்டோஸ்: ஃபயர் எமோஜி பறக்கவிட்ட குஷ்பூ

நடிகை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Jayam Ravi wife aarti photo shoot
நடிகர் ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி

அட என்னப்பா இது. ஜெயம் ரவியின் மனைவியா இது என ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு ஹாட் போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார் ஆர்த்தி.

நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு ஆரவ், அயான் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் ஆரவ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு, விருதுகளையும் வாங்கிக் குவித்தார். இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அதற்கு அவர் நடத்தியுள்ள போட்டோஷுட்தான் காரணம். அழகு பதுமையான அவர் காட்சிகயளிக்கும் போட்டோக்கள் அவருக்கு ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளன.
மேலும் நடிகை குஷ்பூ படத்தை லைக் செய்து எமோஜி பதிவிட்டுள்ளார்.

எனினும் அவர் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. நடிகர் ஜெயம் ரவி, எம். குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி படத்தின் போது ஆர்த்தியை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இந்தக் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜெயம் ரவியின் அப்பா-அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.

ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று பொன்னியின் செல்வனாக வளர்ந்து நிற்கிறார் ஜெயம் ரவி. அவரின் நடிப்பில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

அதில் பேராண்மை மாஸ் க்ளாசிஸ் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும். மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனார்த்தனன் இயக்கத்தில் வெளியான இப்படம் பேராண்மையாக தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor jayam ravis wife aarti has conducted a photo shoot