இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை சரிகா. 2 முறை தேசிய விருது பெற்ற இவர், கடந்த 1988-ம் ஆண்டு தமிழ சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் – சரிகா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். ஆனாலும் ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் சரிகாவுடனே இருந்தனர். தற்போது இருவரும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சரிகா கொரோனா லாக்டவுன் காலத்தில் தான் பணக்கஷ்த்தில் இருந்தாகவும், அப்போது பணத்திற்காக சீரியலுக்கு நடிக்க சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான பார் பார் டிகோ என்ற படத்தில் நடித்திருந்த சரிகா தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு இந்தி படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
முதலில் திரைத்துறையில் இருந்து ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த சரிகா பின்னாளில் இந்த இடைவெளி கொரோனா தொற்றுநோய் காரணமாக நீட்டிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் கொரோனா லாக்டவுனின் போது தன்னிடம் பணம் இல்லாமல் போனதாகவும், சீரியல்களில் பணியாற்றியதில் ₹ 3,000 க்கும் குறைவாகவே ஊதியம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சீரியலால் மட்டுமே ஒரு நடிகைகளை நிலை நிறுத்த முடியாது என்று உணர்ந்த அவர். மீண்டும் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார். மேலும் சீரியலில் நடித்து வாழ்க்கையை வீணடிப்பதாக நான் நினைத்தேன். நாள் முழுவதும் ஓய்வில்லாமல் இருந்ததால், நான் ஒரு வருடம் ஓய்வு எடுத்துக்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடிவு செய்தேன். அந்த காலகட்டத்தில்முற்றிலும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நினைத்து சீரியலில் நடிக்க தொடங்கினேன்.
இது மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது, இதனால் ஒரு வருட இடைவெளி பின்னாளில் ஐந்தாண்டுகளாக மாறியது. ஆனால் அப்போது நாள் மகிழ்ச்சியாக இருந்தேன்.“லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பணம் தீர்ந்துவிட்டது, எனவே சீரியலில் ₹ 2000-2700 வரை கிடைக்கும் என்பதால் மீண்டும் நடிக்க திரும்பினேன். இது மிகவும் கவனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. இந்த ஐந்து வருடங்கள் நன்றாக இருந்தது.
தற்போது நடிகை சரிகா அடுத்து திரைப்பட தயாரிப்பாளர் அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவாவின் தொடரில் நடிக்கவுள்ளார். மேலும் வரவிருக்கும் பிரைம் வீடியோ தொகுப்பில், மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ப்ரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ் தயாரித்துள்ள மாடர்ன் லவ்: மும்பை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாகிறது.
தொடர்ந்து சூரஜ் பர்ஜாத்யாவின் உஞ்சாய் படத்தில் அமிதாப் பச்சன், நீனா குப்தா, அனுபம் கெர் மற்றும் போமன் இரானி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். சரிகா கடைசியாக கத்ரீனா கைஃப் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் பார் பார் தேகோ (2016) படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil