மணி ரத்னத்துக்கு கமல் வைத்த பட்டப் பெயர்; 'நான் லேட்டா வர காரணம்... இதுதான்" - சிம்புவின் தக் பதில்!

படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வருவதாகவும், தனது படங்களின் தயாரிப்பாளர்களுடன் மோதல் இருப்பதாகவும் அடிக்கடி விமர்சிக்கப்பட்ட சிம்பு, அண்மையில் இயக்குநர் மணிரத்னத்தின் தொழில்நேர்மையை பாராட்டி பேட்டி ஒன்றில் கூறினார்.

படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வருவதாகவும், தனது படங்களின் தயாரிப்பாளர்களுடன் மோதல் இருப்பதாகவும் அடிக்கடி விமர்சிக்கப்பட்ட சிம்பு, அண்மையில் இயக்குநர் மணிரத்னத்தின் தொழில்நேர்மையை பாராட்டி பேட்டி ஒன்றில் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan reveals

மணி ரத்னத்துக்கு கமல் வைத்த பட்டப்பெயர்; 'நான் லேட்டா வர காரணம்... இதுதான்" - சிம்புவின் தக் பதில்!

வித்தியாசமான தலைமுறைகளில் பிறந்திருந்தாலும், தமிழ் நடிகர்கள் கமல்ஹாசனும் சிம்புவிற்கும் விசித்திரமான ஒற்றுமை உள்ளது. இருவரும் குழந்தை நடிகர்களாக திரையுலகில் அறிமுகமான பிறகு, திரைப்படக்குழுக்களில் தான் வளர்ந்தவர்கள். கமல்ஹாசன், 6 வயதில் இயக்குனர் பீம்சிங்கின் இயக்கத்தில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் நடித்த ”களத்தூர் கனம்மா” (1960) படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இது அவருக்கு ராஷ்ட்ரபதி விருதையும் பெற்றுத்தந்தது.

Advertisment

சிம்பு, அதைவிட இளமையாக, ஒரு வயதிலேயே அவரது தந்தை டி. ராஜேந்தரின் ”உறவை காத்த கிளி” (1984) படத்தில் திரையில் அறிமுகமானார். பின்னர், இருவரும் தனித் தனியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இருவரையும் இணைக்கும் மற்றொரு அம்சம், இயக்குனர் மணிரத்னத்திடம் கொண்டுள்ள பக்தியும் மரியாதையும் ஆகும். தற்போது கமல் மற்றும் சிம்பு மணிரத்னத்தின் ”தக் லைஃப்” படத்தில் நடித்து முடித்துள்ளனர். இருவரும் இணைந்து முதல்முறை  நடிக்கும் படமாகும். அண்மையில், கமலும் சிம்புவும் மணிரத்னத்துடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Kamal Haasan reveals his new nickname for Mani Ratnam;

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் படக்குழு கலந்துக் கொண்டனர்.

Advertisment
Advertisements

மற்ற எந்த இயக்குநர்களுடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மணிரத்தினத்தின் உழைப்பை பாராட்டிய கமல், ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு சூரியன் உதிப்பதற்கு முன்பே மணிரத்னம் வந்துவிடுவார். அவரது இந்தப் பழக்கத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு புதிய பட்டப்பெயர் ஒன்றையும் வைத்துவிட்டதாக கமல் தெரிவித்தார்.

தக் லைஃப்” படப்பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது, ”நாயகன்’’ காலத்தில் அவரிடம் பார்த்த அதே உற்சாகத்தை மீண்டும் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதனால்தான் அவரை இப்போது ‘அஞ்சர’ மணிரத்னம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டேன். (‘அஞ்சர’ என்றால் 5.30 மணியை என்பதை குறிக்கும்) ஏனென்றால், காலை 5.30 மணிக்கே ஷூட்டிங் வந்துவிடுவார். 5 மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். இதை யோசிச்சுப் பாருங்கள், ஒளிப்பதிவாளர் ரவி சந்திரனின் நிலைமையை அவர் குறைந்தபட்சம் 15 நிமிடம் முன்பே சென்று தயாராக இருக்க வேண்டியிருக்கும்.

நான் இந்த பட்டப்பெயரை சொல்லும்போது, அனைவரும் கைத்தட்டலுடன் வரவேற்றார்கள். நானோ அவரிடம், ‘நான் 5.30க்கு வரமாட்டேன், காலை 7 மணிதான் என்னால் முடியும். 5.30-க்கு வந்தால் நாம இருவர்தான் இருப்போம், பேசிக்கொண்டே இருப்போம்; வேறு யாரும் இருக்கமாட்டாங்க. அதனால, நீ உன்னோட வேலைய பண்ணிக்கோ, நான் 7 மணிக்கு வர்றேன்’ன்னு சொல்லிட்டேன்,” என்று ராச்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய விளம்பர நிகழ்ச்சியில் கமல் கலகலப்பாக கூறினார். “அவர் வெறும் காலையிலே எழும் பறவையா இல்ல; பெரும்பாலான பறவைகளைவிட பெரிய சிப்பாற்கள் உள்ள ஒரு பறவையாகவே இருக்கிறார்,” என்று கமல் அழுத்தமாகக் கூறினார்.

மறுபுறம், இயக்குநர் மணிரத்னத்தை அவரது தொழில்முறை நேர்த்திக்காக பெரிதும் புகழ்ந்த சிம்பு, மணிரத்னம் படப்பிடிப்பு தளங்களுக்கு ஒருபோதும் தாமதமாகச் செல்லவில்லை என்பதையும் பகிர்ந்தார். பொதுவாக படப்பிடிப்பு தளங்களுக்கு தாமதமாக வருவதும், படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டவர்தான் சிம்பு.

நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவதைக் குறித்து கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் " என்ன நிறைய பேர் கேட்ட ஒரு கேள்வி மணி சார் திரைப்படத்திற்கு மட்டும் நீங்க லேட்டா போக மாட்டுறீங்க? அவரு ஸ்டிரிக்டா? இல்ல பயமா? என கேட்கின்றனர். எனக்கு மணி சார் மீது பயம் கிடையாது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நான் மணி சாரோட ஷூட்டுக்கு ஒரு நாளும் லேட்டா போனது கிடையாது. நான் ஒரு நடிகர் படத்தை நம்பி பலப்பேர் இருகின்றனர்.

முதலில் ஒரு இயக்குநர் படத்தை சொன்ன நேரத்தில் எடுக்க வேண்டும். முதலில் ஒரு இயக்குநர் நேரத்திற்கு வரணும், அவரு ஒழுங்கா வந்தா தான் மத்தவங்க எல்லாம் ஒழுங்கா வருவாங்க. முதலில் ஒரு கதையை சொன்னப்பிறகு ஆன் தி ஸ்பாட் வந்துவிட்டு அதை அப்படி எடுக்கலாமா இப்படி எடுக்கலாமா என்ற குழப்பம் இருக்க கூடாது அது மணி சாரிடம் என்றுமே இருந்தது இல்லை. எனக்கு மணி சார் மாதிரி இயக்குநர்கள் கிடைத்து இருந்தால் என் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்து இருப்பார்கள், இன்னும் அதிகம் திரைப்படம் நடித்து இருப்பேன். எனக்கு சினிமாவை விட்டா எதுவும் தெரியாது. இ லவ் சினிமா" என கூறியுள்ளார். 

சிம்புவின் பேச்சைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் தனது அனுபவத்தை பகிர்ந்தார். “நானும் இதே மாதிரி சந்தித்துள்ளேன். பலர், ‘நீ கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா மாதிரி இயக்குநர்களின் செட்டுக்கு நேரம் பார்த்து போறே; ஆனா மற்றவர்கள் 9 மணிக்கு வா சொன்னா 10 மணிக்கு தான் வறேன்னு கேட்டிருக்காங்க. அந்த நேரத்தில் அவர்கள் கையில் ஊன்றுகோலுடன் நடந்தார்கள். ஆனா அவர்களிடமிருந்தது ஊன்றுகோல் மாதிரியான ஒன்று மட்டுமே. உண்மையில் சினிமாவை ஆட்சி செய்தது பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றவர்கள்தான். இப்படி இருக்கும்போது இவர்கள் மாதிரி ஆளுமையுள்ளவர்கள் உடன் வேலை செய்யும் போதுதான், நமக்குள்ளேயே ஒரு அலாரம் சத்தம் அடிக்க ஆரம்பிக்கிறது. நேரத்திற்கு எழுந்து தயாராக இருக்க என்றார் கமல்.

Kamal Haasan Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: