நடிகை ஸ்ரீவித்யா நிச்சயமாக எனது காதலிதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நேர்காணல் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பேசிய வீடியோ பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கமலின் இந்த பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
குழந்தை நடசத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னாளில், உதவி நடன இயக்குனர், குணச்சித்திர நடிகர், என பல போராட்டங்களுக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். 1973-ம் ஆண்டு வெளியான இந்த படம், கமல்ஹாசனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில், சிவக்குமாருடன் முக்கிய கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீவித்யா. மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்த இவர், 1967-ம் ஆண்டு வெளியான திருவருட்செல்வர் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து 1975-ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 1971-ம் ஆண்டு கமல்ஹாசன் ஏசுவாக நடித்திருந்த அண்னை வேளாங்கன்னி என்ற படத்தில் ஸ்ரீவித்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். உணர்ச்சிகள், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், குணா, நம்மவர், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்கள் நடித்த அபூர்வ ராகங்கள் படத்தின் போதே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், கமல்ஹாசன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணம் செய்துகொண்டார் என்றும் தகவல் வெளியானது. ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீவித்யா 2 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா, கடைசி காலத்தில், தான் கமல்ஹாசனை பார்க்க விரும்புவதாக கூறியிருந்த நிலையில், கமல்ஹாசன் கேரளாவுக்கு சென்று அவரை சந்தித்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு கடந்த 2006-ம் ஆண்டு ஸ்ரீவித்யா மரணமடைந்தார். இதனிடையே ஸ்ரீவித்யா என் காதலிதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று, விஜய் டிவியின் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவில், இதில் சில புகைப்படங்களை கொடுத்து இதில் இருக்கும் ஒவ்வொரு நடிகைகள் பற்றியும் கூற வேண்டும் என்று சொல்கிறார். இதில் முதல் படமாக அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீவித்யா இருவரும் கை பலம் பார்க்கும் விளையாட்டு போன்று வைத்திருப்பார்கள். இந்த படத்தை பற்றி கூறுகையில், அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும்போது எனக்கு வயது 19. அந்த வயதில், நான் திறமையானவன் என்று எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட டிடி அன்பு தோழியா என்று கேட்க, தோழி மட்டுமல்ல காதலியும் தான் என்று கூறியுள்ளார். மேலும், அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட நட்பு கடைசிவரை நீடித்தது. அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“