கமல் மட்டுமே நடிக்கும் பேய் படம்?!… பரம ரசிகனுடன் கைகோத்த உலக நாயகன்

கைதி படத்தில் மிஷின் கன் எப்படி மிரட்டல் தோற்றத்தை கொடுத்ததோ, அதைத் தாண்டும் வகையில் நேற்று வெளியிட்ட போஸ்டரில் ஏகப்பட்ட துப்பாக்கிகளை வைத்து மிரட்டல் லுக்.

`மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாருடன் இணைய போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்புக்கு நேற்று விடை கிடைத்தது. சில நாட்களாகவே ரஜினி அல்லது கமலுடன் அடுத்து அவர் இணைவார் என்ற பேச்சு இருந்துவந்தது. அதற்கு காரணம், விருது விழா மேடையில் லோகேஷ் குறித்து கமல் பேசியதுதான். இதையடுத்தே கமல் புரொடெக்ஷனில் ரஜினி நடிக்க, லோகேஷ் படம் இயக்குவார் எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இதில் ஒரு சிறிய மாற்றமாக கமல் புரொடெக்ஷனில் கமலே நாயகனாக நடிக்க, லோகேஷ் படம் இயக்க உள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் வரிகளான `எவனென்று நினைத்தாய்’ என்பதயே இந்தப் படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுளள்து. இது கமல்ஹாசனுக்கு 232வது படமாகும். டைட்டில் அறிவிப்பின் போதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். கைதி படத்தில் வரும் மிஷின் கன் எப்படி அந்தப் படத்துக்கு மிரட்டல் தோற்றத்தை ஏற்படுத்தி கொடுத்ததோ, அதைத் தாண்டும் வகையில் நேற்று வெளியிட்ட போஸ்டரில் கமலின் உருவ தோற்றத்தில் ஏகப்பட்ட துப்பாக்கிகளை வைத்து மிரட்டல் லுக்கை கொடுத்துள்ளார் லோகேஷ்.

இந்தப் படத்தின் மூலமாக கமலுடன் முதல்முறையாக கைகோர்க்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத். மாநகரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த லோகேஷ், தான் தோன்றும் ஒவ்வொரு மேடையிலும், கமல்ஹாசனின்  தீவிர ரசிகன் நான், அவரின் படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக்கொண்டேன், எனச் சொல்லி வந்த நிலையில் தற்போது கமலையே இயக்க இருக்கிறார். இதனால் கமலின் படத்தை அணு அணுவாக செதுக்குவார் என்று இப்போதே அவரின் ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். இதுமட்டுமில்லாமல், படத்தின் அறிவிப்பு வெளியான அன்றே அதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தும்விட்டனர்.

கமல் மட்டுமே நடிக்கும் பேய் படம்?!

இதற்கிடையே, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல் படத்துடன், Once upon a time there lived a ghost என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இதனால் இது கமல் மட்டுமே சோலோவாக நடிக்கும் பேய் படம் என்று ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போது இருந்தே எகிற ஆரம்பித்துவிட்டது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor kamal hassan join hands with director logesh kanagaraj

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இளவரசி வந்தாச்சி.. மொத்த குடும்பமும் பயங்கர ஹாப்பி!pandian stores serial meena baby vijay tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com