Video : தந்தையை கேலி செய்த கஸ்தூரி... வெவஸ்த வேண்டாமா என திட்டிய நடிகர் கார்த்தி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

செல்பி விஷயத்தில் தந்தை சிவகுமாரை வைத்து மேடையிலேயே கேலி செய்த கஸ்தூரியால் கோவமடைந்த நடிகர் கார்த்தி அதே மேடையில் பதிலடி கொடுத்தார்.

Advertisment

கடந்த ஆண்டு இறுதியிலும் இந்த ஆண்டு இறுதியிலும் செல்ஃபி பிரச்சனையால் நடிகர் சிவகுமார் பற்றி ஊரே பேசிக் கொண்டிருந்தது. முன்னதாக ஒரு பொது நிகழ்வு ஒன்றில், இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு பின்னர் புதிய செல்போனும் வாங்கிக் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

அதற்குள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே போன்ற மற்றொரு சர்ச்சையிலும் சிக்கினார். சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயன்ற ஒரு நபரின் செல்போனை தட்டிவிட்டார். இதனால் மீண்டும் இந்த பிரச்சனை பூதம் போல கிளம்பியது.

கஸ்தூரியின் வார்த்தைகளால் கொந்தளித்த நடிகர் கார்த்தி

Advertisment
Advertisements

இதற்கிடையே நாட்டில் நடக்கும் பெரும்பாலான சம்பவங்களில் மூக்கை நுழைத்து கருத்து சொல்பவர் கஸ்தூரி. ஏற்கனவே டுவிட்டரில் இவர் கூறும் பல சர்ச்சை கருத்தால், நெட்டிசன்கள் இவரை வருத்தெடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நடிகர் கார்த்திக்கே மேடையில் கஸ்தூரி கடுமையாக சாடினார்.

ஜூலை காற்றில் படத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், கார்த்தியை மேடைக்கு வரவழைப்பதற்கு முன்னர், “கார்த்தி வாங்க உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கப் போறேன். உங்க அப்பா இல்லைல அதுனால தான்” என்று கேலி செய்து சிரித்தார்.

உடனே கோவத்தில் பொங்கியெழுந்த கார்த்தி, “இது தேவையில்லாத விஷயமாக இருக்கிறது. போங்க. ஒரு மரியாதையே இல்லாம போச்சுல செல்பிங்குற விஷயத்துக்கு. யாருக்குமே மரியாதை இல்லாம போச்சு. கேட்டுட்டு ஃபோட்டொ எடுக்கனும்நு இல்லாம போச்சு. முன்னாடி ஒரு ஃப்லாஷ் பின்னாடி ஒரு ஃப்லாஷ். ரெண்டு ஃப்லாஷ் இருந்தா மைக்கிரேன் இருக்க மனுஷன் என்ன ஆவான். ஒரு வெவஸ்தையே இல்லாம போச்சு. அதே மாதிரி கஸ்தூரி ஒரு வழக்கறிஞரும் கூட. அதுனால நிறைய விஷயங்கள் தெரிஞ்சிகுட்டு மக்களுக்கு அறிவாற்றனும்நு கேட்டுக்குறேன்” என்று கேலி செய்த கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார்.

Karthi Kasthuri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: