Advertisment

மக்களோடு இணைந்து அபிநந்தனுக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர் கார்த்தி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor karthi, நடிகர் கார்த்தி

actor karthi, நடிகர் கார்த்தி

பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்துள்ள விமானப்படை வீரர் அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப தாம் பிரார்திப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

Advertisment

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மண்ணில் வான்வழி தாக்குதலை நடத்தியது. அதன் நேற்று இந்தியாவின் உள்ளே ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் விமானப்படை வீரர் அபிநந்தன் ஈடுபட்டார்.

அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப நடிகர் கார்த்தி பிரார்த்தனை

அப்போது அவர் சென்ற விமானத்தை பாகிஸ்தான் தாக்கியதில், அந்த விமானம் கீழே விழுந்தது. அதில் இருந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. தற்போது அவரை பத்திரமாக நாடுக்கு திரும்பி அழைத்து வரும் பணிகளை இந்தியா மேர்கொண்டு வருகிறது.

அவரின் வருகைக்காக இந்தியாவே வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

February 2019

February 2019

“இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில ஃபைட்டர் பைலட்டுகளை என் வாழ்வில் சந்தித்தது எனது அதிர்ஷ்டமே. அவர்களைத் தெரிந்து கொண்டது உண்மையில் ஒரு பெருமை. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன். நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும் தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, அபிநந்தன் நாளை(மார்ச் 1) விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Karthi Indian Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment