முழுக்க முழுக்க கிராமத்து கதையாக, விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் இது ஒரு அழகான குடும்பக் கதை என்று பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தப் படம் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான வெற்றியை ஈட்டியுள்ளது என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தின் வெற்றியை அடுத்து, நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் படத்தை பார்த்துப் பாராட்டி அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
கடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி! #KadaikuttySingam @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/LtqopWe5gd
— Actor Karthi (@Karthi_Offl) 16 July 2018
மேலும் கடைக்குட்டி சிங்கம் படத்தை வெற்றிபெற செய்த மக்கள் அனைவரும் நன்றி என்றும் இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.