/tamil-ie/media/media_files/uploads/2018/01/karthi.jpg)
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகிய கார்த்தி, சிறுத்தை, பையா, ஆயிரத்தில் ஒருவன் முதல் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வரை பெரிய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இப்போது ஒரே நேரத்தில் வா வாத்தியாரே மற்றும் மெய் அழகன் ஆகிய இரு படங்களில் நடித்து கூறுகிறார். வா வாத்தியாரே படத்தை நலன் குமாரசாமி இயக்க, மெய் அழகன் படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த படங்களை தாண்டி கைதி 2, தீரன் அதிகாரம் 2, சர்தார் 2, பா.இரஞ்சித் படம், மாரி செல்வராஜ் படம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு காஃபி வித் டி,டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, தனது க்ரஷ் நடிகை குறித்து கூறிய விஷயம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், உங்கள் கிரஷ் பற்றி சொல்லுங்கள் என டி.டி கேட்க, இதற்கு நடிகர் எனக்கு நடிகை அமலா மீது தனக்கு சிறுவயதில் இருந்தே மிகப்பெரிய கிரஷ் உண்டு. இப்ப வரைக்கும் அது இருக்கிறது என்று கூறினார். மேலும் சிறுவயதில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.
நடிகை அமலா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் சென்னை அடையாறு அருகே ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். எப்போதும் அவரது ஓட்டலில் சென்று பார்சல் வாங்கி வர எங்கள் வீட்டில் இருந்து டிரைவரை அனுப்புவோம். ஆனால், இரவு நேரத்தில் அமலா அங்கு இருப்பார் என்பதால் நானும் டிரைவருடன் ஓட்டலுக்கு சென்று அமலாவை சைட் அடிப்பேன். எனக்கு அமலா மீது கிரஷ் இருப்பதை எங்கு வேண்டுமானாலும் கூச்சமே இல்லாமல் சொல்வேன் என்று நடிகர் கார்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.