/tamil-ie/media/media_files/uploads/2018/10/d526.jpg)
Dev first look, actor karthi
கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜத் ரவிஷங்கர் என்ற அறிமுக இயக்குனர் படத்தில், கார்த்தி நடித்து வரும் படம் தேவ். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.
மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
Super happy to launch Thambi @Karthi_Offl ‘s ???? #DevFirstLook#Dev@RajathDir@RakulPreet@Jharrisjayaraj@VelrajR@lakku76@PrincePictures_@RelianceEnt@TagoreMadhu@LightHouseMMLLP All the best team!!! ???????????? pic.twitter.com/kD7DP5Nq0w
— Suriya Sivakumar (@Suriya_offl) 25 October 2018
உக்ரைன் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் ஹைதராபாத், குலுமணாலியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் உள்ளிட்டவை முடிக்கப்பட்டு டிசம்பர் 21-ல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சூர்யாவின் மகனின் பெயரும் தேவ் என்பது கூடுதல் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.