சபரிமலைக்கு மாலை அணிந்து சென்ற பிக்பாஸ் புகழ் கவின்.. அப்படி என்ன வேண்டுதல் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தனது நண்பர்களுடன் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சந்நதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

சென்ற வருடம் கொரோனா காரணமாக, சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடுமையான கட்டுப்பாடு இருந்தது. இதனால் வருடாவருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள், தங்கள் வீடுகளின் அருகிலுள்ள கோயில்களில் மாலை அணிந்து விரதத்தை முடித்தனர். தற்போது சில கொரோனா கட்டுப்பாடுகளுடன், சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் புகழ் கவின் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றுள்ளார். அவருடன் நெருங்கிய நண்பர்களான கனா படத்தின் ஹீரோ சத்யராஜ் தர்ஷன் மற்றும் பிக்பாஸ் வீட்டிலிருந்தபோது கவினை கண்ணத்தில் அறைந்த இன்னொரு நண்பர் பிரதீப் ஆண்டனி ஆகியோரும் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கவினின் நண்பர் பிரதீப் அண்டனி ட்வீட்டரில் கூறியது: கவின் தனது லிப்ட் படத்தின் வெற்றிக்காக ஐயப்பனை வேண்டிக்கொண்டார். கவினுக்கு காலில் காயம் இருந்த போதிலும், அவன் மலை ஏறுவதை பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருந்தது. மேலும் கவினுக்கு ஆதரவாக அவனுடன் என்னால் இருக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். செம்ம மச்சா நீ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய புகழையும், ரசிகர்களையும் தேடித்தந்தது. பின்னர் சில நாட்களுக்கு காணாமல் இருந்த கவின், பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டார்.அதன்பிறகு, கவின் வாழ்க்கை வெகுவாக மாறியது. அவரது விரைவான புத்திசாலித்தனம் மற்றும் அன்பான ஆளுமை பார்வையாளர்களுக்கு பிடித்தது.

கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரவேண்டுமென ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி நட்புனா என்னனு தெரியுமா (2019) திரைப்படத்தில் கவின் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு நடிகராக பெயர் வாங்கித் தந்தது சமீபத்தில் வெளியான லிஃப்ட் படம் தான். சமீபத்தில் அஸ்கு மாரோ என்ற ஹிட் மியூசிக் வீடியோவிலும் கவின் தோன்றினார்.

கவின் அடுத்ததாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ஊர்க்குருவி படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் கே இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor kavin went sabarimala photos goes viral on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express