/indian-express-tamil/media/media_files/2025/09/13/dinesh-2025-09-13-12-22-59.jpg)
12-வது ஃபெயில் ஆகிட்டேன், நடிப்பு சுத்தமா வரல; நான் ஆடிஷன் பண்ண கேரக்டர்ல தனுஷ் நடிச்சாரு: கெத்து தினேஷ் ஓபன் டாக் !
’அட்டக்கத்தி’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தினேஷ். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததால் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். கதைத்தேர்வின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் தினேஷ். இவரது திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது.
ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து படம் தான் நடிகர் தினேஷிற்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது. இப்படத்திற்கு பிறகு நடிகர் தினேஷை ரசிகர்கள் கெத்து தினேஷ் என்று அழைக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ திரைப்படத்தில் கெத்து தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ’தண்டகாரண்யம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் தினேஷ் தனது திரைத்துறை பயணம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “காத்து, மழை என்பது போல வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றை தந்து கொண்டிருக்கிறது.
யாரோட வளர்ச்சியையும் யாராலயும் தடுக்க முடியாது. இன்றைக்கு என் வாழ்கைக்கு தேவையானது எனக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. என்க்கு பைக் ரோஸர் ஆக வேண்டும், கார் ரேஸர் ஆக வேண்டும். எஃப். எம் ஆரம்பிக்க வேண்டும் என பல கனவுகள் இருந்தது. எனக்கு இந்தியன் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு கோப்பை வாங்கி கொடுப்பது கனவாக இருந்தது.
மெட்ராஸ் யூனிவர் சிட்டியில் போய் விசாரித்தேன். நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறேன். என்னால் ரெகுலராக பி.கா., பி.ஏ படப்பு எல்லாம் படிக்க முடியாது என்ன செய்யலாம் என்று. அப்போது ஒரு மாணவர் என்னை உட்கார வைத்து எல்லாத்தையும் விளக்கினார். பின்னர் ஒரு 200 ரூபாய் கொடுத்து நீ போய்டு முடிவு பண்ணிட்டு வா என்று சொன்னார். நான் பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் தோற்றுவிட்டேன்.
அதன் பின்னர் இசையமைப்பாளர் ஆகலாம் என்று இளையாராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் எல்லாம் கேட்டேன். அதன் பிறகு இதற்கு ரொம்ப பொறுமை தேவை என்று விட்டுவிட்டேன். பிறகு இயக்குநர் ஆகலாம் என்று முயற்சி எடுத்தேன். நான் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் கொண்டு இயக்குநர் பாலு மகேந்திராவை பார்க்க சென்றேன். ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு கூறினார்.
அலுவலகம் சென்றபோது முருகன் என்ற நபர் நிறைய பேர் இருக்காங்க அதனால் அசிஸ்டெண்டா சேர முடியாது. நடிக்க ட்ரை பண்ணு. அப்பறம் அசிஸ்டெண்டா சேர்ந்துக் கொள் என்றார். அப்போது என்னோட புகைப்படம் கேட்டாங்க. நான் என் ஸ்கூல் புகைப்படத்தை பெரிதாக எடுத்து அங்கிருந்த வெற்றி மாறனிடம் கொடுத்தேன். அதன் பின்னர் துரை செந்தில் சார் எல்லோரும் இருந்து ஆடிசன் பண்ணாங்க.
நான் ரிகசல் பண்ண காட்சியில் வேறொருவர் நடித்தார். அது எனக்கு வருத்தமாக இருந்தது. அதுக்கு அப்பறம் கூத்து பட்டறை எல்லாம் போய் நடிப்பு பழகிவிட்டு மூன்று வருடங்களுக்கு பிறகு பாலு மகேந்திரா அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது வெற்றி சாரும் அங்கு வந்தார். பின்னர் என்னையும் இன்னொரு நடிகரையும் புகைபடம் எடுத்தார்கள். எங்கள் கண்கள் நான்றாக இருக்கிறது என்று. பாலு மகேந்திர சார் எடுத்துக் கொடுத்த புகைப்படம் இன்றும் இருக்கிறது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.