'கேப்டன் மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால்..!' கண் கலங்கிய கிங்காங்

கிங்காங் மகள் திருமண விருந்து நிகழ்ச்சியின்போது விஜய்காந்த் குறித்து பேசியதும் கிங்காங் பழைய நியாபகங்களை நினைவுக்கூர்ந்து கண் கலங்கினார்.

கிங்காங் மகள் திருமண விருந்து நிகழ்ச்சியின்போது விஜய்காந்த் குறித்து பேசியதும் கிங்காங் பழைய நியாபகங்களை நினைவுக்கூர்ந்து கண் கலங்கினார்.

author-image
WebDesk
New Update
king kong vijayakanth

நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் ஜூலை 10 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு, கிங்காங் தனது நண்பர்களுக்கு அளித்த திருமண விருந்தில், மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்த் குறித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இவர்களின் தொழில்முறை உறவைத் தாண்டி, தனிப்பட்ட அளவில் மிகுந்த அன்பையும் மரியாதையையும் கொண்டிருந்ததாக கிங்காங் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கிங்காங் தனது வீட்டுக் கல்யாண விருந்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்துப் பேசும்போது கண்ணீர் சிந்திய வீடியோ 'சினி உலகம்' யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. விஜயகாந்தை தனது தலைவராகவும், மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கருதுவதாக கிங்காங் அடிக்கடி கூறுவார். விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால், தனது மகளின் திருமணம் அவரது தலைமையில் நடந்திருக்கும் என்று அவர் பலமுறை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கிங்காங்கின் மகளின் திருமண அழைப்பிதழை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் கொடுத்தபோது, விஜயகாந்த் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவரும் கண்ணீருடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நெருங்கிய பந்தத்திற்கு உதாரணமாக, நடிகர் மன்சூர் அலி கான் திருமண நிகழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கிங்காங் நினைவு கூர்ந்தார். அந்த நிகழ்வில், அமர இடம் இல்லாத சூழலில், விஜயகாந்த் கிங்காங்கிற்கு தனது மடியில் அமரச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, விஜயகாந்த் கிங்காங்கின் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்துள்ளார். அதிலும் கிங்காங்கின் "கந்தசாமி" காமெடி விஜயகாந்துக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது. விஜயகாந்தைப் பற்றிப் பேசும்போது, கேப்டன் பல நடிகர்களை வாழ வைத்தவர் என்றும், கடவுளுக்கு நிகரானவர் என்றும் கிங்காங் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம், விஜயகாந்த் மீதான கிங்காங்கின் ஆழ்ந்த பற்றுதலையும், மரியாதையையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

விஜயகாந்தின் அன்பு குறித்து பேசும்போது கிங்காங் கண்கலங்கி அவருடனான நட்பை பகிர்ந்துக்கொண்டார். விஜயகாந்த் குறித்து பல சினிமா பிரபலங்கள் கண் கலங்கி பேசியுள்ளனர். அவர்மீது எப்போதுமே அன்பு உள்ளதாகவும் கிங்காங் பல இடங்களில் கூறியுள்ளார்.

Vijayakanth Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: