/indian-express-tamil/media/media_files/2025/07/16/vadivelu-and-kingkong-2025-07-16-12-33-48.jpg)
அண்மையில் நடைபெற்ற நடிகர் 'கிங்காங்' சங்கர் மகளின் திருமணத்திற்காக, ரூ. 1 லட்சத்தை வடிவேலு கொடுத்துள்ளார். இந்த தகவலை சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் 'கிங்காங்' சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக நடிகர் 'கிங்காங்' சங்கர் வீட்டு திருமணம் தான் ட்ரெண்டாக இருந்தது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை பலருக்கும் நடிகர் 'கிங்காங்' சங்கர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.
பலரும் இதற்கு வரவேற்பு அளித்தாலும், சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர். ஆனால், ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய ஒரு முன்னணி கலைஞர், இத்தனை பேருக்கு அழைப்பிதழ் கொடுத்தது சரியானது என்று நடிகர் 'கிங்காங்' சங்கரருக்கு ஆதரவு குரலும் எழுந்தது.
அதற்கு ஏற்றார் போல் முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினரும், வி.சி.க தலைவருமான திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவரது வீட்டு திருமணத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில், நடிகர் வடிவேலுவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவரது செயல் குறித்து நெகிழ்ச்சியுடன் நடிகர் 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "தொலைபேசி வாயிலாக வடிவேலு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொண்டது மிகப் பெரிய விஷயம் என்று கூறினார். குறிப்பாக, திருமணத்திற்கு வராதவர்களை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் வந்ததன் மூலம் தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் திருமணத்திற்கு வந்ததாக நினைத்துக் கொள்ளுமாறு கூறினார். மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றார். திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு என்னுடைய உழைப்பு தான் காரணம் என்று தெரிவித்தார்.
வடிவேலு தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளார். மேலும், பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றும் படத்தின் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று கூறினார்.
எனினும், வடிவேலுவின் மனேஜர் சங்கர், மேக்கப் மேன் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் ரூ. 1 லட்சத்தை வடிவேலு கொடுத்து அனுப்பியிருந்தார். நேரடியாக வந்து தன்னால் கொடுக்க முடியாத காரணத்தினால், அவர்களிடம் கொடுத்து அனுப்பியதாக கூறினார்" என 'கிங்காங்' சங்கர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.