பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாடகம் ஒளிபரப்பாகிறது. காலை முதல் இரவு 9மணி வரை நாடகம் ஒளிபரப்பாகிறது. விஜய் டி.வி ஏராளமான ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. சீரியல் நடிப்பவர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வரிசையில் இப்போது விஜய் டி.வியின் டிஆர்பியில் ஹிட் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் புதிய கதாபாத்திரம் என்டரி ஆக உள்ளது. கதையில் மீனாவின் தங்கை சீதாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது போல் காட்சிகள் வருகிறது. அதோடு மற்றொரு கதாபாத்திரமான ரோஹினியை பிளாக்மெயில் செய்யும் காட்சிகள் அதன் தொடர்ச்சி என சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சீரியலில் புதிதாக நடிகர் குமரன் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். சீரியலில்
அவரது கதாபாத்திரம் குறித்து தெரியவில்லை, ஆனால் அவர் சீதாவிற்கு பார்க்கும் மாப்பிள்ளையாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வரும் வாரத்தில் குமரன் என்டரி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“