மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும் என்று நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தில் விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக சரவணா ஸ்டோர் நிறுவத்தின் அதிபர் லெஜண்ட் சரவணா சமீபத்தில் வெளியான லெஜண்ட் படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளர், நாயகன் என அறிமுகமானார். இரட்டை இயக்குநர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து லெஜண்ட் சரவணா தனது அடுத்த படத்திற்கு நடிப்பதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்று விஜயதசமியை முன்னிட்டு லெஜண்ட் சரவணா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் ‘என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜயதசமி நாளான இன்று தனது சொந்த ஊரில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்த லெஜணட் சரலணா, தனது வீட்டில் அண்ணதானம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக சரவணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அந்த பகுதியில் உள்ள ஏராளமான ஒரு சாப்பிட்டுவது தெரியவந்துள்ளது. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“