
வாய்ப்பு எப்போ வரும்னு தெரியாது, வந்தா சிறப்பா யூஸ் பண்ணணும்; மாதம்பட்டி ரங்கராஜ் த்ரோபேக்!
’மெஹந்தி சர்கஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனான அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் கலைஞராகவும் உள்ளார். பல திரைப்பிரபலங்களின் இல்ல நிகழ்விற்கு சமையல் செய்து வருகிறார். தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
சமீபகாலமாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்டா குறித்த பிரச்சனை சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஜாய் கிரிசல்டா,மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரிடம் புகாரளித்திருந்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் பல கேள்விகளையும் எழுப்பியது. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த பிரச்சனைகள் எதற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், கொரோனா காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து அவர் பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு கோடி ரூபாய் வீணானது. ஏனென்றால் கோயில்களோட முதல் விதியை 20 பேருக்கு மேல் திருமணத்திற்கு வரக்கூடாது என்பது தான். எங்கயுமே கூட்டம் சேரக்கூடாது. ஆனால் எங்களோட ஆட்கள் மட்டுமே ஆயிரம் பேர் இருக்காங்க.
எப்படி அவங்களுக்கு உணவளிப்பது? எப்படி மாதம் சம்பளம் கொடுப்பது? பொறுப்புகளை எப்படி சமாளிப்பது என்று ஒரு நிலமை வந்தது. அப்போது எங்களுடைய சென்ட்ரல் கிச்சன் இருந்ததால் கோயம்பத்தூர் முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு கிட்டதட்ட 50 பேரில் இருந்து ஐந்தாயிரம் பேர் வரை தினமும் எங்களுடைய சென்ட்ரல் கிச்சன் மூலமாக உணவளிக்கும் வாய்ப்பு அரசிடம் இருந்து கிடைத்தது. சொல்லப்போனால் கொரோனா காலத்தில் தான் எங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைத்தது. எப்போ எந்த வாய்ப்பு வரும் என்று தெரியாது. வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா குறித்து கருத்து தெரிவித்து அண்மையில் செய்தி வாசிப்பாளர் பனிமலர் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us