New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/07/screenshot-2025-08-07-102403-2025-08-07-10-24-24.jpg)
மறைந்த மதன் பாப்பின் மகள் ஜனனி ஒரு பிரபல பாடகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதன் பாபு 1950ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆரம்பத்தில் இசை அமைப்பாளராக திரைத் துறையில் காலடி வைத்த அவர், பின்னர் நகைச்சுவை நடிகராக உருவெடுத்து, சினிமா உலகில் தனக்கே உரிய ஒரு நிலையை உருவாக்கினார்.
1984ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் மூலம் மதன் பாபு ஒரு நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 'வானமே எல்லை', 'காட்ஜி மல்லி', 'தேவர் மகன்', 'ஹானஸ்ட் ராஜ்', 'திருடா திருடா', 'பூவே உனக்காக' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.
1990-களிலிருந்து பல வெற்றிப்படங்களில் துணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த மதன் பாபு, பின்னாள்களில் பல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றினார். கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஆகஸ்ட் 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத் துறை பங்களிப்பாளர்களையும், ரசிகர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. மதன் பாபுவின் உடல், சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டில், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி, திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்கள் மதன் பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், அன்று பிற்பகலில் அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்ட நிலையில் தகனம் செய்யப்பட்டது.
மதன் பாப்பின் மனைவி சுசிலா ஒரு பாடகி, மேலும் இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். தந்தையிடம் இருந்து இசையை கற்ற ஜனனி ஒரு சிறந்த பாடகராக வலம் வருகிறார். இவர் சிறந்த தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில்100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சுந்தர் சி நடித்த வீராப்பு படத்தில் வரும் "போனா வருவீரா.." தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வரும் "ரோசு ரோசு ரோசு.." விஜய் நடித்த சுறா படத்தில் வரும் "நான் நடந்தா அதிரடி.." போன்ற பல சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஜனனி, "வெளியில் இருக்கும் மரங்கள் ஏன் சற்று வெறிச்சோடியது போல தோன்றுகின்றன? உலகமே ஏன் மங்கலான ஒன்றாக இருக்கிறது? நான் சுவாசிக்கும் காற்றே ஏன் வேறுபட்டதாக தெரிகிறது? இனி வாழ்க்கை யாரையோ இழந்தது போலவே உணர்கிறது? ஏனெனில், ஒரு தலைசிறந்த தந்தையை அது வழியனுப்பி வைக்கிறது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.