இதில் எது யார்? விடுகதை விளையாடும் மாதவன்... ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் மாதவன் அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளதோடு அந்த படத்தை தானே இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கி வந்தார்.

நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்

தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இப்படத்தில் இருந்து விலக, நடிகர் மாதவன் தனியாக இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக இப்படத்தை ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கப்போவதாக மாதவன் தெரிவித்திருந்தார்.

 

View this post on Instagram

 

After 14 hrs on the chair.. Who is who is WHO??????????????????????? #rocketryfilm @tricolourfilm @media.raindrop @vijaymoolan

A post shared by R. Madhavan (@actormaddy) on

1990களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close