Actor Madhavan Decoupled Web Series Issue : மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலை பாயுதே படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ப்ரியமான தோழி, ஜேஜே ஆயுத எழுத்து உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். திரைப்படம் மட்டுமல்லாது எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்ட மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பற்றிய இந்த படம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியான உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீடு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , இந்நிலையில் மாதவன் நடித்த டாகுபிளெய்டு (Decoupled) என்ற வெப் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த வெப் தொடர் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போ பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த தொடரின் ஒரு காட்சியின், ஒரு இஸ்லாமியர் தொழுகையில் இருக்கும் அறைக்கு செல்கிறார். அப்போது அவர் தொழுவதுபோல் மாதவன் உடற்பயிற்சி செய்கிறார்
இதை கவனிக்கும் அந்த இஸ்லாமியர் பார்க்கும்போது மாதவன் தான் இந்து கடவுளை கும்பிடுவதுபோல் செய்து சமாளிக்கிறார். தற்பேது இந்த காட்சி தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாதவன் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இந்த காட்சியில் நடித்திருப்பதாகவும் இந்த காட்சியை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இந்த கட்சியில் நடித்த மாதவனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகினறனர். மேலும் இந்த வெப் தொடரில், இதே போன்று பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil