/indian-express-tamil/media/media_files/2025/08/19/download-11-2025-08-19-11-12-37.jpg)
இந்தியாவில் பல முன்னணி நடிகர்கள் தங்கள் சமூகப் பொறுப்பினை உணர்ந்து, பல்வேறு தொண்டு செயல்களில் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவர்களில், தெலுங்குத் திரை உலகின் பிரபல நடிகரும், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபு, அவரது தொண்டு பணிகளால் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றவர்.
தன்னுடைய நடிப்பின் மூலமும், தனிப்பட்ட முயற்சிகளின் மூலமும் மக்களின் வாழ்வில் நேரடியான மாற்றங்களை ஏற்படுத்தும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பலர் அறியாதவிதமாக, மருத்துவம், கல்வி மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பல்வேறு சமூகத் திட்டங்களை மகேஷ் பாபு தனது தனிப்பட்ட நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறார்.
இந்த நற்காரியங்கள் மூலம் அவர், சினிமா உலகத்தைத் தாண்டி, சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்து, "இந்தியாவின் மிக அதிகம் தொண்டு செய்யும் நடிகர்" என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரின் இந்த அரிய பணிகள், மற்ற நடிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றன.
தென்னிந்தியாவின் பிரபல நடிகராக அறியப்படும் மகேஷ்பாபு, தனது தொண்டு பணிகளுக்காக அறியப்படுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில் மகேஷ் கணிசமான அளவு செல்வத்தை குவித்துள்ளார். தனது செல்வத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அவர் தொண்டு செயல்களுக்காக பயன்படுத்துகிறார்.
அதன்படி நடிகர் மகேஷ் பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30% நன்கொடையாக வழங்குகிறார், எனவே அவர் ஆண்டுக்கு ரூ.25-30 கோடி பணத்தை தொண்டு செயல்களுக்கு வழங்குகிறார். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மகேஷ் பாபு. மேலும் சில தொண்டு நிறுவனங்களை அவரே நடத்தி வருகிறார்.
இந்த அமைப்புகளில் ஒன்று ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார். இன்றுவரை இந்த முயற்சியின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார்.
இவை தவிர மகேஷ் பாபு இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார், அங்கு அவர் சாலைகள், மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியுள்ளார்.
19790ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய மகேஷ் பாபு பல படங்களில் நடித்தார். பின்னர் அவர் 1999 இல் 24 வயதில் ஹீரோவாக அறிமுகமானார்.
2000 களின் முற்பகுதியில் முராரி மற்றும் ஒக்கடு ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகராக மாறினார். எனினும் சில பின்னடைவுகளையும், தோல்விகளையும் சந்தித்த அவர் தூக்குடு மற்றும் பிசினஸ்மேன் போன்ற ஹிட் படங்களுடன் கம்பேக் கொடுத்தார்.
அவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார், இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.