scorecardresearch

ஜோதிகா பட ஷூட்டிங்கில் திடீர் என்ட்ரி கொடுத்த சூர்யா: விருந்து வைத்த பிரபல நடிகர்

தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் ரசிகர்களை பெற்றுள்ள சூர்யா அங்கு ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஜோதிகா பட ஷூட்டிங்கில் திடீர் என்ட்ரி கொடுத்த சூர்யா: விருந்து வைத்த பிரபல நடிகர்

கேரளா சென்றுள்ள நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிக்கு நடிகர் மம்முட்டி பிரியாணி விருந்து வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணயைத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம், மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான், மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்றுப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்தும் வருகிறார்.

இதனிடையே திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் லீடு ரோலில் நடித்து வந்த ஜோதிகா கடைசியாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திரருந்தார். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது காதல் தி கோர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். கேரளாவின் மெகாஸ்டார் மம்முட்டி இந்த படத்தின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு திடீர் விசிட் அடித்துள்ள நடிகர் சூர்யா மம்முட்டி – ஜோதிகா இணைந்து நடித்து வரும் காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் ரசிகர்களை பெற்றுள்ள சூர்யா அங்கு ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதனிடையே திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர் சூர்யாவை வரவேற்ற நடிகர் மம்முட்டி அவருக்கும் ஜோதிகாவுக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தறபோது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகை ஜோதிகா 12 ஆண்டுகளுக்கு பின் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் காதல் தி கோர் படத்தை தி கரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தை இயக்கிய ஜோபேபி இயக்கி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor mammootty serves briyani for surya in kathal the core shooting spot