இந்த படத்துல தூள் கிளப்புறோம்; கட் சொன்னவுடன் கட்டி பிடித்த ரஜினி; இளம் நடிகருக்கு கொடுத்த ஊக்கம்!

காலா படப்பிடிப்பின்போது ரஜின்காந்த் உடன் இணைந்து நடித்த நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.

காலா படப்பிடிப்பின்போது ரஜின்காந்த் உடன் இணைந்து நடித்த நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
rajini manikandan

நடிகர் மணிகண்டன், 2018ல் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மும்பையின் தாராவி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், மணிகண்டன் லெனின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Advertisment

மணிகண்டன் இந்தியத் திரையுலகில் ஒரு திறமையான நடிகராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும் அறியப்படுகிறார். இவர் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல், மணிகண்டன் எழுத்து மற்றும் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டவர். விக்ரம் வேதா படத்தின் வசனங்களில் ஒருவராகப் பணியாற்றினார். மேலும், குறும்படங்கள் மற்றும் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஜெய்பீம், லவ்வர், குட்நைட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மணிகண்டன் காலா படத்தில் லெனின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்த தன்னை பாராட்டிய ஒரு அனுபவம் குறித்து அவர் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் போன்ற ஒரு ஜாம்பவான் அருகில் இருக்கும்போது நடிப்பது எளிதல்ல. மணிகண்டனும் படப்பிடிப்பின்போது மிகவும் பயந்ததாகவும், பதட்டமாகவும் உணர்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், தனது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் முழு கவனம் செலுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

அந்தக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும்தான் அந்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. ரஜினிகாந்த், மணிகண்டனை கட்டிப்பிடித்து, "கலக்கிட்டீங்க போங்க" என்று பாராட்டியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் இந்த வார்த்தைகள் மணிகண்டனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தன. "அந்தக் காட்சியின் படப்பிடிப்பு எனக்கு ஒரு மறக்க முடியாத மற்றும் பிரமிப்பான அனுபவம்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

ரஜினிகாந்த் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம், இளம் நடிகர்களின் திறமையை அங்கீகரித்து, அவர்களை உற்சாகப்படுத்துவது திரையுலகில் அரிதானது. இது இளம் கலைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அமைகிறது. மணிகண்டனின் இந்த அனுபவம், ரஜினிகாந்தின் பெருந்தன்மையையும், அவர் மற்றவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: