இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா மகன் திருமணத்தில் மருதாணியால் வந்த சிக்கலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத ஒருவர் மனோபாலா. படம் இயக்கம் மற்றும் நடிப்பு என எதை கையில் எடுத்தாலும் கச்சிதமாக முடிப்பவர்.
சந்திரமுகி, அரண்மனை, மாப்பிள்ளை என பல திரைப்படங்களில் இவரின் சட்டில் காமெடிக்கு வயிறு குலுங்க சிரிக்காமல் இருப்பவர்களே கிடையாது. இவரின் மகன் ஹரிஷுக்கும் பிரியாவுக்கும், சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் கடந்த 11ம் தேதி திருமணம் நடைபெற்றது.
நடிகர் மனோபாலா வீட்டு திருமணத்தில் மருதாணியால் பிரச்சனை
இவர் இல்லத்திருமணத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பல விவிஐபி, விஐபிகள் கலந்துக் கொண்டனர். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த பிறகு, முறைப்படி இந்த திருமணத்தை பதிவு செய்யவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அவ்வாறு இத்திருமணத்தை பதிவு செய்வதற்காக மாப்பிள்ளை மற்றும் பெண்ணை பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது கை ரேகை பதிக்கும் இயந்திரம் பெண் பிரியாவின் ரேகையை மட்டும் பதிவு செய்ய மறுத்தது.

காரணம், அவர் கையில் வைத்திருந்த மருதாணி. இரண்டு கைகளிலும் கட்டை விரலிலும் மருதாணி அடர்த்தியாக இருந்தது. இந்த மருதாணி கையில் ரேகை அச்சு சரியாக பதிய விடாமல் தடுத்தது.
February 2019
இதனால் கடினம் ஏற்பட, இது குறித்த பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் மனோபாலா பதிவிட்டார். இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை என்று குறிப்பிட்டு விழிப்புணர்வு பதிவை பகிர்ந்திருக்கிறார். இதனை பெரும்பாலானோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.