/indian-express-tamil/media/media_files/2025/09/22/manoj-2025-09-22-21-50-27.jpg)
வளையல் கடையில் சூப்பர் ஹிட் ஹீரோவை தேடிப் பிடித்த தமிழ் இயக்குனர்; பெருமையாக சொன்ன மலையாள நடிகர்; ரசிகர்கள் நெகிழ்ச்சி
கடந்த 1983-ல் இயக்குநர் இமயம் பாராதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை மொத்தமாக கொள்ளையடித்த இந்த படத்தின் மூலம் தான் நடிகை ரேவதியும், பாண்டியனும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமானார்கள்.
நடிகை ரேவதி என்னதான் கேரளாவைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் முதல் படத்திலேயே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணான முத்துப்பேச்சியாகவே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்தப் படம், ஓராண்டுக்கும் மேலாக பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
அதுமட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் ரேவதியின் பயணத்துக்குப் பலமான அடித்தளமிட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுக்கு ‘மண்வாசனை’ படமே முதல் திரைப்படமாகும். மூன்று வருட போராட்டத்திற்குப் பிறகே இயக்குநர் பாரதிராஜாவின் கால்ஷீட் அவருக்கு கிடைத்தது.
முறைப்பொண்ணான ரேவதியும், பாண்டியனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பாண்டியன் சிலரை கொலை செய்துவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகிறான். ஓடிப்போன மாமன் வருகைக்காக ரேவதியும் காத்திருக்கிறார்.
அந்தநேரத்தில் நிழல்கள் ரவி வாத்தியாராக அந்த கிராமத்திற்கு வருகிறார். அவருக்கும் ரேவதி மீது காதல் மலர்கிறது. ஆனால், பாண்டியன் - ரேவதி காதல் கதையை கேட்டு தன் மனதை மாற்றிக் கொண்ட நிழல்கள் ரவி, பாண்டியன் எழுதுவது போன்று ரேவதிக்கு கடித்தம் எழுதி படித்தும் காட்டுகிறார்.
ஒரு நாள் இரண்டு கடிதங்கள் வருகிறது. அதில் ஒன்று பாண்டியன் எழுதியது. பாண்டியனின் வருகை ரேவதிக்கு அதிர்ச்சியளிக்கிறது. ராணுவத்தில் சேர்ந்த பாண்டியன் வடகத்திய பெண் ஒருவரை திருமணம் செய்து உடன் அழைத்து வந்துள்ளான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேவதியின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ‘மாண்வாசனை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும், ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் இன்றும் வரையும் முறைமாமன்கள் தன் மாமன் பொண்ணை பார்த்து பாடும் பாடலாக உள்ளது.
இந்நிலையில், ‘மண்வாசனை’ திரைப்படத்திற்கு நடிகர் பாண்டியனை இயக்குநர் பாரதிராஜா எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ”மண்வாசனை படத்திற்காக மதுரைக்கு செல்லும் பொழுது இயக்குநர் பாரதிராஜா தேர்ந்தெடுத்த கதநாயகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கதாநாயகனை மாற்றும் நிலை ஏற்பட்டது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு இல்லாமல் இருந்தது.
அப்போது, எல்லோரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது கோயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு வளையல் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு பையன் இருந்தான். அப்பொழுது பாராதிராஜா அந்த பையனை பார்த்து இந்த பையன் நன்றாக இருக்கிறான். இவனயே கதாநாயகனாக தேர்ந்தெடுப்போம் என்று கூறியுள்ளார். அந்த கடையில் இருந்து தேர்ந்தெடுத்த பையன் தான் பிற்காலத்தில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் பாண்டியன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.