/indian-express-tamil/media/media_files/2025/09/14/mgr-2025-09-14-16-38-52.jpg)
டைட்டில் பிடித்ததால் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்; கதறி அழுத கதாசிரியர் கடைசியில் வைத்த செம்ம ட்விஸ்ட்!
கடந்த 1965-ம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படம் அந்த நேரத்தில் பெரும் வெற்றியை பெற்றது. 'ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் அனைத்தும் இன்றும் மக்கள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது.
எம்.ஜி.ஆரும் வில்லன் நம்பியாரும் பேசிக் கொண்டிருக்கும் போது ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெள்ளிவிழாவின் போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட பதற்றம் நிலவி வந்தால் வெள்ளி விழா கொண்டாட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
49 ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டு இப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் வசனம் எழுதிய வசனக்கர்த்தா ஆர்.கே.சண்முகம் இயக்குநர் பி.ஆர். பந்தலுவிடம் உதவியாளராக பணியாற்றியவர். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார்.
இதைத் தொடர்ந்து, 'முகராசி', 'தனிப்பிறவி', 'ரகசிய போலீஸ் 115', 'ரிக்ஷாக்காரன்', 'சிரித்து வாழ வேண்டும்', 'ஊருக்கு உழைப்பவன்' என பல்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஆர்.கே. சண்முகம் பெற்றார். அந்த அளவிற்கு இவரது வசனங்கள் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தன.
இந்நிலையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ கதையை கேட்ட எம்.ஜி.ஆர், வசனகர்த்தா ஆர்.கே. சண்முகத்திற்கு பணம் கொடுத்த போது அவர் கதறி அழுதது தொடர்பான தகவலை நடிகர் ஞான சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “டி. ஆ.பந்தலு அவர்கள் ‘கர்ணன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற படங்களை எடுத்தவர். எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.
இந்த படத்திற்கு ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார். அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார்கள். படத்திற்கான கதை சொல்லி முடித்த பிறகு, எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை கேட்டுள்ளார். அதற்கு வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் "ஆயிரத்தில் ஒருவன்" என்று தலைப்பு சொல்லியுள்ளார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் அவருக்கு 1001 ரூபாய் பரிசாக அளித்துள்ளார்..
அதை வாங்கியதும், வசனகர்த்தா தேம்பி தேம்பி அழுதுள்ளார். அப்போது ஏன் அழுகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்டதற்கு, "லட்சத்தில் ஒருவன்" என்று தலைப்பு வைத்திருந்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருப்பீங்களே என்று பதிலளித்தார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us