scorecardresearch

பிரபல நடிகருடைய மகனின் திருமணம் திடீர் நிறுத்தம்!

தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஜ்பூரி நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்

பிரபல நடிகருடைய மகனின் திருமணம் திடீர் நிறுத்தம்!

ஊட்டியில் நடைபெறவிருந்த பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி. பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாலிவுட்டின் மிகச் சிறந்த மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவருடைய மகன் மகா அக்ஷய். இவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஜ்பூரி நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகாஅக்ஷயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமாக உதகையில் உள்ள ஹோட்டலில், அவரது நீண்ட கால தோழியான மடால்சா ஷர்மாவுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத்தில் பங்கேற்க பல விஐபிக்கள் உதகையில் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பாதிக்கபட்ட பெண் டெல்லி போலீஸாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்ததையடுத்து,  இத்திருமணம் நிறுத்தப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor mithun chakraborthy son mahaakshay marriage stopped

Best of Express