தெலுங்கு சினிமா உலகின் மூத்த நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோகன் பாபு தனது மகன் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகாவிடம் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Mohan Babu files police complaint against son Manchu Manoj, seeks protection
மோகன் பாபுவின் போலீஸ் புகாரில், மனோஜ் மஞ்சு, சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து, ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜல்பல்லியில் உள்ள அவரது வீட்டில் ‘மஞ்சு டவுன்’ என்ற வீட்டில் ஞாயிற்றுக்கிழமை குழப்பத்தை ஏற்படுத்தினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எனது பாதுகாப்பு, எனது மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் எனது சொத்துக்காக நான் பயப்படுகிறேன். இந்த நபர்கள் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் எனது வீட்டிற்குத் திரும்பி வருவதற்காகக் காத்திருப்பதாகவும், அச்சத்தை ஏற்படுத்தவும், நான் நிரந்தரமாக எனது வசிப்பிடத்தைக் கைவிடுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்கள் அனைவரும் சமூக விரோதிகள் மற்றும் நான் உட்பட என் வீட்டில் இருப்பவர்களுக்கு பயத்தையும் உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள்” என்று மூத்த நடிகர் மோகன் பாபு போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
மனோஜ் மஞ்சு, மோனிகா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன் பாபு கோரியுள்ளார். மேலும், அவர்களை தனது சொத்துக்களில் இருந்து வெளியேற்றுமாறு காவல்துறையினரை வலியுறுத்தினார்.
மோகன் பாபு பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தும் நடிகர் மோகன் பாபு, “எனது பாதுகாப்பை உறுதிசெய்ய எனக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவும், அச்சமின்றி எனது வீட்டை அணுக அனுமதிக்கவும் வேண்டும்.” எனக் கோரியுள்ளார்.
முன்னதாக, மனோஜ் மஞ்சு தனது தந்தையால் தாக்கப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்திற்குச் சென்றதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மோகன் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் போலீஸ் புகாரின் நகலை வெளியிட்டார், அதில் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா தன்னைத் தாக்கியதாகவும், அவருக்கு பாதுகாப்பு தேவை என்றும் கூறப்பட்டுள்ளத். அதில், “8.12.2024 அன்று, எனது இளைய மகன் மனோஜ் (தற்செயலாக எனது வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்களுக்கு முன்பு வந்தார்) சமூக விரோதிகளுடன் சேர்ந்து எனது வீட்டில் தொந்தரவு செய்தார், அவர் ஆட்களை ஏவினார், பின்னர், அவர் தனது மனைவி மோனிகாவுடன் வளாகத்தை விட்டு வெளியேறினார், தனது 7 மாத மகளை வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரால் பணியமர்த்தப்பட்ட ஆயாவின் பராமரிப்பில் விட்டுச் சென்றார்.” என்று கூறப்பட்டுள்ளது.
“காலை 10.30 மணி அளவில் மாதப்பூரில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்தபோது, எனது மகன் மனோஜின் கூட்டாளிகள் எனக் கூறி சுமார் 30 நபர்கள் எனது இல்லத்திற்குள் வலுக்கட்டாயமாக அத்துமீறி நுழைந்ததாக எனது பணியாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எனது ஊழியர்களை மிரட்டி, எனது சொத்தில் இருந்து வெளியேற்றினர், அவர்களின் அனுமதியின்றி யாரும் வீட்டிற்குள் நுழைய முடியாது என அறிவித்தனர்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.