/indian-express-tamil/media/media_files/2025/09/20/ms-baskar-2025-09-20-10-19-25.jpg)
எங்கள் அண்ணா குடிகாரன் காமெடி உண்மை சம்பவம்; எம்.எஸ்.பாஸ்கர் சொன்ன அந்த நபர் யார்?
காமெடி, வில்லத்தனம், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். கடந்த 1987-ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் எம்.எஸ். பாஸ்கர்.
அதன் பிறகு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர், ’டும் டும் டும்’, ‘தமிழன்’, ’பார்க்கிங்’, ‘ட்டூரிஸ்ட் பேமிலி’, ‘அறை எண் 305-யில் கடவுள்’, 'சூது கவ்வும்', ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘எட்டு தோட்டக்கள்’ உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
’பார்க்கிங்’ திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காமெடி நடிகராக வலம் வந்த எம்.எஸ்.பாஸ்கர் முழு வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். இவரின் இந்த நடிப்பை பலரும் பாராட்டினர்.
எம்.எஸ்.பாஸ்கரின் காமெடி மட்டுமல்லாமல் குடிக்காரன் கதாபாத்திரங்களும் எப்போதும் பேசப்படும். குறிப்பாக விஜயகாந்த், வடிவேலு நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் குடிகாரராக நடித்திருப்பார் பாஸ்கர்.
ஆனால் இன்றளவும் குடிகாரர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்களாக பயன்படுத்தப்படுவது அந்தக் காட்சிதான். அந்த அளவுக்கு அசல் மதுப்பிரியராகவே மாறி காமெடியில் அசத்தியிருப்பார். இந்நிலையில், ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த குடிகாரன் கதாபாத்திரத்தின் உண்மை சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மனம் திறந்துள்ளார்.
அவர் பேசியதாவது, “கமலா திரையரங்கு வாசலில் ஒரு சின்ன பெட்டிக்கடை இருந்தது. அங்கு ஒருத்தர் மதுபோதையில் தன் மனைவியை திட்டிக் கொண்டிருந்தார். நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு காலைல எதோ டீனு தர குடிக்கிறேன். அப்பறம் டிபன்னு எதோ தர சாப்பிடுறேனு சொல்லிட்டு நா கேக்குறதுக்கு பதில் சொல்லுனு சொல்றான். அப்பறம் குறுக்க பேசாதனு சொல்றான்.
எனக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. கேக்குறதுக்கு பதில் சொல்லுனு சொல்றான் அப்பறம் குறுக்க பேசாதனு சொல்றான் அப்ப அவன் மனைவி என்ன பண்ணுவாங்கனு. இதுல இன்னொரு விஷயம் என்னவென்றால் முதலில் இருந்தே அந்த குடிகாரன் மனைவி அங்கு இல்லை அவரது வீட்டில் இருக்கிறார். அந்த குடிகாரன் காற்றில் பேசிக் கொண்டிருக்கிறான். அவனது ஆற்றாமையை இங்கு வெளிப்படுத்துகிறான்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.