Advertisment

எவ்ளோ நாளைக்கு காத்திருப்பது? டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா திருமண நலுங்கு வீடியோ

Ishwarya bhaskar marriage: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமண நலுங்கு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
எவ்ளோ நாளைக்கு காத்திருப்பது? டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா திருமண நலுங்கு வீடியோ

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா என்கிற மகனும் உள்ளனர். இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். ரகுல் ப்ரீத்தி சிங், ராஷ்மிகா போன்ற பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். இவருக்கும் அகுல் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Advertisment
publive-image

ஐஸ்வர்யா-அகுல் திருமணத்தை 2020ஆம் ஆண்டே நடத்தி முடிக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேதி தள்ளிப்போனது. நிச்சயம் செய்யப்பட்டே இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் காதல் ஜோடிகள் இனியும் காலம்தாழ்த்தாது திருமணம் செய்ய உள்ளனர். விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. ஐஸ்வர்யாக தனக்கு நலுங்கு வைக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment