Advertisment

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா : பிரபல நடிகையுடன் டேட்டிங்? வைரல் போட்டோ!

கஸ்டடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக நாகசைதன்யா விவாகரத்துக்கு பின் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
chaintaya sobhitha

நடிகை சைதன்யா - சோபிதா

சமந்தாவை விவாரத்து செய்த நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அந்த நடிகையுடன் நாக சைதன்யா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தனி வீட்டில் வசித்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பிறகு இருவருமே படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில், சமந்தா தோல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மறுபுறம் கஸ்டடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக நாகசைதன்யா விவாகரத்துக்கு பின் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா - நாக சைதன்யா இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Bagas

கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் டேட்டிங் விவகாரம் குறித்த தகவல்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், சோபிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வதந்திகளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அறைகுறை அறிவுடன் இருக்கும் சில சொல்லும வதந்திகளுக்கு பதில் அளிப்பதை விட சொந்த வேலையை பார்ப்பது அந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நினைப்பதாக கூறியிருந்தார்.

அதன்பிறகு இருவரும் டூர் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது நாக சைதன்யா சோபிதா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில், இதுக்கு என்ன சொல்றீங்க என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Naga Chaitanya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment